ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதுகுறித்து ரஷ்ய நோய் தடுப்பு மையம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,065 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. . இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,12,823 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் 688 பேரும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 159 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கரோனா தொற்று தினமும் 0.6 % ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கரோனாவுக்கு இதுவரை 15,498 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. உலகிலேயே முதல் நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.
ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மைம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவில் தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இல்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பற்றது என்ற குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புதினும்,அவரது சுகாதாரத் துரை அமைச்சகமும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago