மெக்சிகோவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,371 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மெக்சிகோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,05,751 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மெக்சிகோவில் 55,293 பேர் கரோனாவுக்கு பலியாகினர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் 7-வது இடத்திலும், உயிரிழப்பில் 3-வது இடத்திலும் மெக்சிகோ உள்ளது.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், ஆளும் அரசு முறையாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
» 11ஆண்டுகளுக்குப் பிறகு வந்து டக் அடித்த வேடிக்கை ‘ஸ்டான்ஸ்’ ஃபவாத் ஆலம்: பாகிஸ்தான் திணறல்
» மதுரை மாநகர் அதிமுக 2 ஆக பிரிப்பு? - தடுத்து நிறுத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிரம்
மெக்சிகோவில் உள்ள மாநிலங்களில் 9 கவர்னர்கள் ஆளும் அரசை கரோனா விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago