அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பிறப்பு குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு இதேபோன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமெரி்க்காவில் பிறந்தவர்தான் அதிபராக வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பினர். இப்போது கமலா ஹாரிஸுக்கும் இதே சிக்கலை உண்டாக்க முயல்கின்றனர்.
2008-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை வீழ்த்தும் திட்டத்தில் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று குடியரசுக் கட்சியினர் புகாரை எழுப்பினர். ஒபாமா தனது பிறப்புச்சான்றிதழை வெளியிட்டபோதிலும், அவர் ஹவாய் மாநிலத்தில் பிறக்கவில்லை, கென்யாவில் பிறந்தவர், இந்தோனேசியாவில் பிறந்தவர் என்று சர்ச்சையை கிளப்பினர். ஆனால், அனைத்தையும் முறியடித்து அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தனர். இயல்பிலேயே அவர் அமெரிக்கர் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பிறந்தவர் என்ற முறையில் அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றவர்.
இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஜான் ஈஸ்ட்மேன். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டபின், ஜான் ஈஸ்ட்மேன் ஒரு நாளேட்டில் கமலா ஹாரிஸ் குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் “ அமெரி்க்க அரசியலமைப்புச் சட்டப்படி அதிபராகவோ, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கண்டிப்பாக அமெரி்க்கராக இருக்க வேண்டும். ஆனால், துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸின் பிறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன, துணை அதிபர் பதிவிக்கு தகுதியானவரா என்று கேள்வி எழுப்பிஇருந்தார்” இது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ட்ரம்ப் பதில் அளிக்கையில் “ நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான தகுதியைப் பெறவில்லை. மிகவும் திறமையான வழக்கறிஞர் ஒருவர் கமலா ஹாரிஸ் பிறப்பு குறித்த விஷயங்களை எழுதியுள்ளார். அது உண்மையா என எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் குறித்த விஷயங்களைக் கேள்விப்பட்டேன் அதை பகிர்ந்து கொண்டேன்.
அமெரி்க்க துணை அதிபர் வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்யும் முன் அவரின் தகுதி குறித்த விவரங்களை ஆய்வு செய்து ஜனநாயகக் கட்சியினர் தேர்வு செய்திருக்கலாம். பலரும் கமலா ஹாரிஸ் பிறப்பால் அமெரிக்கர் இல்லை என்று கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
உண்மையில் கமஹா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர். தாய் ஷியாமலா ஹாரிஸ் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1964-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் கமஹா ஹாரிஸ் பிறந்தார். அவர் பிறப்பால் இயல்பிலேயே அமெரிக்கர் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பிறந்தவர்.
அமெரிக்கத் துணை அதிபராக கமலா ஹாரி்ஸ் வெற்றி வெற்றால் முதல் கறுப்பினப் பெண், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர், ஆப்பிரிக்க அமெரி்க்கர் என்ற பல பெருமைகளைப் பெறுவார்.
இதனிடையே அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரச்சார நிதிக்குழுவின் உறுப்பினர் அஜய் புடோரியா கூறுகையில் “ கமலா ஹாரிஸ் கடந்த 1964-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி கலிபோர்னியாவின் ஒக்லாந்தில் பிறந்தவர்.
அமெரி்க்க அரசியலமைப்புச் சட்டத்தின் 2-வது பிரிவின்படி அதிபராக ஒருவர் வர வேண்டுமானால் அமெரிக்கராக இருக்க வேண்டும். ஆனால், 1787-ம் ஆண்டுக்குப்பின் அமெரி்க்காவில் பிறந்து குடியுரிமை இருந்தால்போதுமானது.
கமலா ஹாரிஸ் அமெரி்க்காவில் பிறந்த அமெரிக்கர். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை, அவர் தகுதி குறித்து பேசவும் தேவையில்லை. இதுபோன்ற பிறப்புரிமை குறித்து சர்ச்சைகளை குடியரசுக் கட்சியினர்தான் எழுப்புவார்கள். நாட்டுக்கு ட்ரம்ப் அவமானத்தை தேடித் தருபவர்.
நான் எது குழந்தைகளிடம் கூறுவது என்னவென்றால், எதிர்காலத்தில் நீங்களும் அமெரி்க்காவின் அதிபராக துணை அதிபராக வரலாம். கடினமாக உழைத்து அதிபர் கிளின்டன், ஒபாமா, பிடன், ஹாரிஸ் வழியைப் பின்பற்றுங்கள் என அறிவுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
27 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago