‘‘அமெரிக்காவில் பணிபுரிந்து விட்டு வெளிநாடு திரும்பியவர்கள் அதே நிறுவனத்தில்அதே வேலைக்கு திரும்பவிரும்பினால் அவர்களுக்குவிசா வழங்கப்படும்’’ என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா வந்து பணிபுரியும் வெளிநாட்டவருக்கு எச்-1பிஉள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் இந்தியா, சீனா உள்ளிட்டநாடுகளில் இருந்து ஒவ்வொருஆண்டும் ஆயிரக்கணக்கானவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுக் கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந் துள்ளதால் அவர்களுக்கு புதியவேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக இந்த ஆண்டு இறுதி வரை எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்கள் வழங்க அமெரிக்க அதிபர் டரம்ப் கடந்த ஜூன் 22-ம் தேதி தடை விதித்தார்.
இந்நிலையில் இத்தடையில் சில தளர்வுகளை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் பணி புரிந்துவிட்டு சொந்த நாடு திரும்பியவர்கள், அதே நிறுவனத்தில் அதே வேலைக்கு, அதே விசா பிரிவில் அமெரிக்கா திரும்ப விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. எச்-1பி மற்றும் எல்-1 விசா பிரிவினருக்கு இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐ.டி. மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பியவர்கள் பலன் அடைவார்கள்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago