ரஷ்யா கண்டறிந்துள்ள கரோனா தடுப்பு மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட்.
இதுகுறித்து பிலிபைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கூறும்போது, “ ரஷ்யா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து மனித இனத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். நான் ரஷ்யாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தயார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததற்காக ரஷ்ய அதிபர் புதினையும் அவர் பாராட்டி உள்ளார். இந்த நிலையில் ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து சோதனனைக்கு முதலில் தன்னை உட்படுத்துவேன் என்று டியுடெர்ட் கூறியதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் ஹாரி தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. உலகிலேயே முதல்நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.
ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மைம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவில் தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இல்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பற்றது என்ற குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புதினும்,அவரது சுகாதாரத் துரை அமைச்சகமும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago