சீன அதிபர் ஜின்பிங் உட்பட 3 முன்னணி சீன கம்யூனிஸ்ட் தலைவர்களின் உறவினர்களிடத்தில் ஹாங்காங்கில் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது பெரிய தலைவராகக் கருதப்படும் லீ ஷான்சூவின் மூத்த மகள் லீ குயான்ஷின் பெயரில் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
ஹாங்காங்குடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் டாப் தலைவர்களின் வாழ்க்கை பெரிய அளவில் தொடர்புடையது.
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி வருமாறு:
தலைவர் ஷான்சூவில் மூத்த மகள் லீ குயான்ஷின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற உறுப்பினர்கள் ஹாங்காங்கின் சமூகம் மற்றும் நிதியமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். ஹாங்காங்கின் செல்வந்தர்களுடன் கூட்டுறவு வைத்துக் கொண்டு சீனத் தலைவர்கள் ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் உட்பட பலதுறைகளில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள்தான் ஹாங்காங் நகரின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றனர்.
குயான்ஷின் ஹாங்காங்கில் சீன மாகாண அரசியல் ஆலோசனைக் குழுவை பிரதிநிதித்துவம் செய்தார். ஹாங்காங் அரசின் முதலீட்டு வங்கியில் இவர் தலைவராக இருக்கிறார். இந்த வங்கிக்கும் சீன டாப் தலைவர்கள், அதிகாரிகளுக்கும் வர்த்தக உறவுகள் உள்ளன.
குயான்ஷின் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமான 4 மாடிக் கட்டிடத்தை ஹாங்காங்கில் வாங்கியுள்ளார். இவரது கணவர் பெனின்சுலா ஹோட்டல் பங்குதாரராக இருந்தவர், இப்போது அந்த ஹோட்டல் விற்கப்பட்டது.
ஹாங்காங்கில் உள்ள சீன பல்கலைக் கழகத்தின் சீனா பற்றிய ஆய்வுத்துறை பேராசிரியர் விலி லாம் என்பவர் கூறும்போது, “சீனாவின் சிகப்பு மேட்டுக்குடி கோமான்கள் ஹாங்காங்கில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர், எனவே ஹாங்காங் தற்போது அதன் நிதி அந்தஸ்தை இழந்து விட்டால் இவர்கள் தங்கள் பணத்தை இங்கு பதுக்க முடியாது போய்விடும்” என்றார்.
இந்தப் பின்னணியில்தான் புதிதாக ஹாங்காங்கில் அமல் செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் அங்கு போராட்டங்கள் பொருளாதாரத்தைப் பாதித்து விடக்கூடாது பாதித்தால் சீன தலைவர்கள் அங்கு முதலீடு செய்து பதுக்கியிருக்கும் நிதிகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டு விடும்.
சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் 4 பெரிய தலைவர்கள் சேர்ந்து 51 மில்லியன் டாலர்கள் பெறுமானமுடைய ஆடம்பர வீடுகள், கட்டிடங்களை வாங்கியுள்ளனர்.
அதிபர் ஜின்பிங்கின் மூத்த சகோதரி கீ கியோகியோ 1991 முதலே ஹாங்காங்கில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினார். இவரது மகள் ஷாங் யன்னன் ரிபல்ஸ் வளைகுடாவில் பெரிய வில்லாவுக்கு சொந்தக்காரர். இதை 2009-ல் 19.3 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இதோடு மேலும் 5 சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார் இவர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் டாப் தலைவர்களின் சொத்துக்குவிப்புகளை ரகசியமாகவே வைத்துள்ளது.
தனிச்சொத்து என்ற ஒரு மிகப்பெரிய தீங்கை எதிர்த்து எழுந்ததுதான் கம்யூனிஸம் இந்த நிலையில் கம்யூனிஸ்ட் நாட்டில் அதன் தலைவர்களின் சொத்துக்குவிப்பு பற்றி முழு விவரம் வெளியானால் தலையைக் கிறுகிறுக்கச் செய்து விடும்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago