ஆஸ்திரேலியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக சுமார் 10 லட்சத்தை கடந்துள்ளதாக தொழிலாளர் புள்ளி விவரத் தலைவர் ஜோர்ன் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோர்ன் ஜார்விஸ் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவு முதல்முறையாக 10 லட்சம் பேர்வரை கரோனாவால் வேலை இழப்பை சந்தித்துள்ளன. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
» பாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்துவிட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்
» இன்டர்போலுக்குத் தண்ணி காட்டும் ஐவர்: நெட்ஃப்ளிக்ஸைக் கலக்கும் ‘வோர்ல்ட்ஸ் மோஸ்ட் வான்டட்’
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 22,127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.352பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 mins ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago