கமலா ஹாரிஸ் தேர்வு: ஒபாமா பாராட்டு

By செய்திப்பிரிவு

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பாரக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தேர்வு செய்தார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தேர்வுக்கு ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறும்போது, “ துணை அதிபரை தேர்ந்தெடுப்பது ஒரு அதிபரின் முதல் முக்கிய முடிவு. நீங்கள் ஓவல் அலுவலகத்தில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தேர்வு முழு நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கலாம் .அந்த தருணங்களில் சரியான தீர்வையும், ஆலோசனையும் வழங்குபவர் உங்கள் அருகில் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடன் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்