அமேசான் காடுகள் எரிகிறது என்பது பொய்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா

By செய்திப்பிரிவு

அமேசான் மழைக்காடுகள் தீ விபத்துக்குள்ளாக்குகிறது என்று கூறுவது "பொய்" என்று பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கூறியுள்ளார்.

National Institute for Space Research கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் அமேசான் மழைக் காடுகளில் 2020 ஆண்டின் முதல் பாதியில் மட்டும் காடழிப்பு 25% அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் சுமார் 3,069 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் 1,034 சதுர கிலோ மீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறி இருந்தது.

மேலும் அமேசானினில் நடக்கும் காடழிப்பு குறித்து சர்வதேச சுற்றுச்சுழல் அமைப்புகள் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதற்கு தற்போது பிரேசில் அதிபர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஜெய்ர் போல்சோனாரோ கூறும்போது, “வெப்பமண்டல மழைக்காடுகள் தீ பிடிக்காது. எனவே அமேசான் காடுகள் பற்றி எரிகிறது என்ற கதை ஒரு பொய்” என்று தெரிவித்தார்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார், முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை பிரேசில் அதிபர் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .

40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்