பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசிலில் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, ”பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 52,160 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் சுமார் 1,274 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை கரோனாவுக்கு 1,03,026 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 1,25,85,308 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரஷ்யா கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago