ஹாங்காங்கில் புதிதாக 69 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்தி ஹாங்காங் சுகாதாரத் துறை தரப்பில், “ ஹாங்காங்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 மணி நேரத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,148 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,900 பேர் குணமடைந்துள்ளனர். 1,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே ஹாங்காங்கில் இரட்டை இலக்க எண்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் ஹாங்காங்கில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதால், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
» பாதுகாப்புத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
» பெய்ரூட் வெடி விபத்து: பொறுப்பேற்று அமைச்சர்கள் பலர் ராஜினாமா; பதவி விலகுகிறார் பிரதமர் ?
தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 1.9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago