தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,35,582 ஆக ஆதிகரித்துள்ளது.
வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 593 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 35 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 136 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் உயிரிழப்பிலும், பாதிப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கரோனாவால் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.65 லட்சம் பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பிலும், பாதிப்பிலும் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது.
3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரம் வரை பலியாகி உள்ளனர்.
» நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பிய கத்ரீனா கைஃப்
» இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago