400 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையில் தவிப்பு: ஐ.நா.

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் சுமார் 400 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, “உலக நாடுகள் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் 5-ல் 2 பேர் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர். 300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

400 கோடி மக்கள் வருடந்தோறும் ஒரு மாதத்திலாவது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையைச் சந்திக்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் நீர் மற்றும் சுகாதார வாசதிகள் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பேரழிவு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் இறுதிக் கட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்யப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்