கரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

எந்த ஒரு கரோனா தடுப்பூசியும் உலக மக்களின் பொது நன்மைக்காக கிடைக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே உலகெங்கிலும் பொருளாதார மீட்சி வேகமாக வரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோன தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டு ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கூறும்போது, “கரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை பகிர்ந்து கொள்வது தான் கரோனாவிலிருந்து உலக மக்கள் விரைவில் குணமடைய வழிவகுக்கும். இதன் மூலமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். தடுப்பூசி தேசியவாதம் நல்லதல்ல, அது உதவாது” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் இறுதிக் கட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 -ம் தேதி பதிவு செய்ய உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்