தென்கொரியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவால் இதுவரை 26 பேர் பலியாகினர்.
“தென்கொரியாவில் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சியோம்ஜின் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 26 பேர் பலியாகினர். பத்து பேர் மாயமாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தென்கொரிய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோசியாங் கிராமம் நிலச்சரிவு காரணமாக பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளது. இப்பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சியோலில் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆறுகளின் ஓரங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்லுமாறு தென்கொரிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
» கரோனா தொற்று; மீண்டவர்களின் எண்ணிக்கை 14.2 லட்சத்தைக் கடந்தது
» சிவில் தேர்வில் வெற்றி பெற்ற மல்லிகாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
கரோனா வைரஸ்
தென்கொரியாவில் இரண்டாம் கட்ட கரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் இதுவரை 14,562 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,629 பேர் குணமடைந்துள்ளனர். 304 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago