பிலிப்பைன்ஸில் புதிதாக 4,226 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “ பிலிப்பைன்ஸில் புதிதாக 4,226 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸில் இதுவரை 1,26,885 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் கரோனாவிலிருந்து 67,117 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கிழக்கு ஆசியாவில் கரோனா பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிலிப்பைன்ஸ் அறியப்படுகிறது.
கரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் சீனாவுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிலிப்பைன்ஸ் அரசு முன்னரே அறிவித்து இருந்தது.
» மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் உதவத் தயார்: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார்
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. உலகம் முழுவதும் 1.9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago