கோழிக்கோடு விமான விபத்து: இந்தியர்களுக்கு உதவ உதவி எண்கள்; 24 மணிநேரமும் இயங்கும் ஹாட்லைன்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

By பிடிஐ

துபாயிலிருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் தரையிறங்கியபோது, விபத்துக்குள்ளானதில் 17 பயணிகள் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து அறியவும், தேவையான உதவிகளைப் பெறவும் ஷார்ஜாவில் உதவி எண்களை இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

துபாயிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் போயிங் 737, ஐஎக்ஸ் 1344 எண் கொண்ட விமானம் கோழிக்கோடு நகருக்கு இயக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 பைலட்கள் என 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவுயாக 7.41 மணிக்கு தரையிறங்கியபோது, விமானம் விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் இரு விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உதவ ஷார்ஜாவில் இந்தியத் தூதரகம் சார்பில் ஹாட்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விபத்துக் குறித்த முழுமையான தகவல்களைப் பெறவும், காயமடைந்தவர்கள், உயிரிழந்தர்கள் குறித்த விவரங்களை அறியவும் +9715654 63903, +9715430 90572, +9715430 90571, +9715430 90575 ஆகிய எண்களும், விபத்துக் குறித்த தகவல்களைப் பெற ஷார்ஜாவில் +9716597 0303 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விபத்துக் குறித்தும், பலியானவர்கள், காயமடைந்தவர்கள், பயணிகள் குறித்த முழுமையான தகவல்களை உறவினர்கள் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தனியாக உதவி எண்களை ஷார்ஜாவில் உருவாக்கியுள்ளது. இதன்படி +971659 70303 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா ட்விட்டர் பதிவில், “மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணிநேரமும் இயங்கும் உதவி எண்களையும் மின் அஞ்சலையும் அறிவித்துள்ளது.

இதில் விமான விபத்து தொடர்பாக இந்தியர்கள் தொடர்புகொண்டு பேசலாம். 1800 118 797; +91 11 23012113; +91 11 23014104; +91 11 23017905; Fax: +91 11 23018158; மின் அஞ்சல்: covid19@mea.gov.in” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்