பாகிஸ்தானில் கரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு 6,000-ஐ நெருங்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் தற்போதைய நிலவரம்படி 331 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் கரோனாவால் இதுவரை 2, 80,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
» கரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பேட்டி
» கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை: சென்னையை மற்ற மாவட்டங்கள் பின்பற்றலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago