கரோனா பாதிப்பு: பள்ளிகள் திறக்கப்படாது - மெக்சிகோ

By செய்திப்பிரிவு

மெக்சிகோவில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாது என்று அந்நாட்டு கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ கல்வித்துறை தரப்பில், “ கரோனா பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக மெக்சிகோவில் நடப்பு கல்வி ஆண்டான ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பில் 3-வது இடத்துக்கு மெக்சிகோ நகர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், ஆளும் அரசு முறையாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மெக்சிகோவில் உள்ள மாநிலங்களில் 9 கவர்னர்கள் ஆளும் அரசை கரோனா விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

45 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்