ஜெர்மனியில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் புதிதாக 509 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி நோய்க் கட்டுப்பாட்டு மையம் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,10,402 ஆக அதிகரித்துள்ளது. 1,93,500 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியது. இந்த நிலையில் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடங்களில் ஊரடங்கையும் ஜெர்மனி அமல்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்