பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்திய பெண் நியமனம்

By செய்திப்பிரிவு

மோசமடைந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் தேதி புதிய குழு உருவாக்கப்பட்டது.

6 பேர் கொண்ட குழுவில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா சோரங் இடம்பெற்றுள்ளார். ஒடிசாவின் ரூர்கேலா பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அர்ச்சனா, பாட்னா மகளிர் கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார்.

பின்னர் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (டிஐஎஸ்எஸ்) நிறுவனத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

தற்போது டிஐஎஸ்எஸ் அமைப்பின் ஒடிசா பகுதி ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். ஐ.நா. சபையின் சர்வதேச குழுவுக்கு அர்ச்சனா சோரங் தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளது. பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை மத்திய
அரசு முழுமனதுடன் செயல்படுத்தி வருகிறது. இதற்காக பிரதமர் மோடியை, ஐ.நா. பல முறை பாராட்டி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

5 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்