அமெரிக்காவில் நான்காவது நாளாக தொடர்ந்து கரோனா பலி 1,000-ஐ தாண்டியது

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் தொடர்ந்து நான்காவது நாளாக 1,000க்கு அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக தினமும் 000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். ( செவ்வாய்க்கிழமை 1.141 பேரும், புதன்கிழமை 1,135 பேரும், வியாழக்கிழமை 1,140 பேரும், வெள்ளிக்கிழமை 1,019 பேரும் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்) அமெரிக்காவின் 19 மாகாணங்களில் கரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் கரோனா இறப்பு அதிகமாக உள்ளது.

தொடர்ச்சியாக 2வது வாரமாக அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

42, 48,492 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,48,492 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்