பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 67,860 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து லத்தின் அமெரிக்கா நாடுகளில் பெரிய நாடான பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,27,514 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிரேசிலில் 24 மணி நேரத்தில் 67, 860 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,284 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22, 27,154 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை பிரேசிலில் 82,771 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா பரவலின் மையமாக பிரேசில் விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசில்லுக்கு அடுத்து பெரு நாட்டில் கரோனாவினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பெரு நாட்டில் 3,66,550 கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,455 பேர் பலியாகி உள்ளனர்.
» 16 தொழில் நிறுவனங்களுடன் ரூ.5137 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago