இரண்டாவது நாளாக அமெரிக்காவில் 70,000 பேர் கரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 37,70,138 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,42,065 பேர் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக 70,000 பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் எல்லை மூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. புளோரிடா, அரிசோனா மாகாணங்களில் மட்டுமல்ல நெவாதா, ஓக்லஹாமா போன்ற மாகாணங்களிலும் கரோனா வேகமாகப் பரவுகிறது. கடந்த 14 நாட்களாக அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்துள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
49 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago