ரஷ்யாவில் கரோனா பலி 12,000-ஐ கடந்தது

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கரோனா உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பால் 186 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் ரஷ்யாவில் கரோனா இறப்பு விகிதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இறப்பு அதிகரித்தத் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,406 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 7,59,203-ஆக உயர்ந்துள்ளது. 186 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 12,123- ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் மொத்தமாக 1.38 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5.9 லட்சம் பேர் இறந்துள்ள நிலையில் 77.4 லட்சம் பேர் மீண்டுள்ளனர். கரோனா பாதிப்பில் முதல் இடத்த்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,698,358-ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,41,150- ஆகவும் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 20 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 76 ஆயிரம் பேர் அளவில் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. 25,664 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யா சில நாட்களுக்கு முன்பாக கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்