சீனாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்

By செய்திப்பிரிவு

சீனாவில் திரையரங்குகள் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சீனாவின் திரையரங்க நிர்வாகத்தினர் தரப்பில், “சீனாவில் கரோனா பரவல் தொற்று மீண்டும் பூஜ்ஜியமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் சீனாவில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 30% சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விநியோகிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் திரையரங்குகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஜனவரி மாதம் திரையரங்குகள் மூடப்பட்ன. கரோனா பரவல் குறைந்த நிலையில் மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கரோனா பரவல் தோன்றியதால் திரையரங்குகள் மூடப்பட்டன.

பெய்ஜிங்கில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்