அமெரிக்க ராணுவ அமைச்சர் பதவிக்கு ஓரின சேர்க்கையாளரை பரிந்துரைத்தார் ஒபாமா

By ஏஎஃப்பி

அமெரிக்க ராணுவ அமைச்சர் பதவிக்கு ஓரின சேர்க்கையாளர் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட எரிக் பேனிங்கின் பெயரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.

அதிபரின் இந்த பரிந்துரைக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை ஒப்புதல் அளிக்க வேண்டும். எரிக் பேனிங் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றால் அமெரிக்க வரலாற்றில் ஓரின சேர்க்கையாளராக அறிவித்துக் கொண்ட ஒருவர் ராணுவ அமைச்சராவார்.

ஓரின சேர்க்கையாளர்கள் உரிமை தொடர்பான விஷயத்தில் எரிக் தீவிரமாக பணியாற்றியுள்ளார். ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் நல நிதியும் திரட்டியுள்ளார். அரசுப் பணி உட்பட பல்வேறு பணிகளில் உயர்நிலையில் உள்ளம் ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாக தங்களை அறிவித்துக் கொள்ள ஊக்குவிப்பதற்காக இந்த நிதி திரட்டப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எரிக் பெண்டகன், அமெரிக்க நாடாளுமன்றம் என பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டன் கார்ட்டரின் சிறப்பு தலைமை ஆலோசகர் பதவியிலும் எரிக் இருந்துள்ளார்.

எரிக்கை ராணுவ அமைச்சர் பதவிக்கு ஒபாமா பரிந்துரைத்திருப்பதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் தலைவர் கார்ட்டர் வரவேற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்