ஆஸ்திரேலியாவில் கரோனா பரவலின் புதிய மையமாக சிட்னி உருவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசுத் தரப்பில், “மெல்போர்னைத் தொடர்ந்து சிட்னி நகரிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பரவலின் புதிய மையமாக சிட்னி உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 3,517 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,988 பேர் குணமடைந்துள்ளனர். 49 பேர் பலியாகியுள்ளனர்.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சமூகப் பரவல் காரணமாக பிற மாகாணங்கள் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. தற்போது ஏற்பட்டிருக்கும் பரவல் இரண்டாம் கட்டப் பரவலாக இருக்கக்கூடும் என்ற நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்தந்த மாகாண அரசுகள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளன.
» ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» பி.வாசு தனியே இயக்கிய முதல் படம்; கங்கை அமரன் இசையமைத்த 100வது படம்!
பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சில மாகாணங்களில் எல்லைகள் மூடப்படுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அம்மாகாணத்துடனான எல்லையைத் திறக்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ள்து.
2.25 கோடி மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் இதுவரையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago