நோய் எதிர்ப்பு சக்திதான் கரோனாவை விரட்டும்: சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பேடா எம் ஸ்டாட்லர் உறுதி

By செய்திப்பிரிவு

மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, கரோனா வைரஸிடம் இருந்து நம்மைபாதுகாக்கும் என்று சுவிட்சர்லாந்து விஞ்ஞானி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் பேடா எம் ஸ்டாட்லர்(70), கரோனா வைரஸ் குறித்து எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:

கரோனாவை புதிய வைரஸ் என்று கூறுவது தவறு. இதற்கு முன்பு கடந்த 2002-ல் சார்ஸ் மற்றும் சார்ஸ்-சிஓவி-2 வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வகைதான் கரோனா. பொதுவாக குளிர்காலத்தில் வைரஸ் காய்ச்சல்கள் பரவும். கோடை காலத்தில் காணாமல் போய்விடும். அது போன்ற வைரஸ் வகைதான் கரோனா. இந்த வைரஸ் கோடையில் காணாமல் போகும். குளிர்காலத்தில் மீண்டும் முளைவிடும்.

கட்டுக்கதைகள்

உலக சுகாதார அமைப்பு முதல் முகநூல் விஞ்ஞானிகள் வரை ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். அதாவது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியால், கரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர். இது முற்றிலும் தவறு, கட்டுக்கதைகளுக்கு ஒப்பானது. மனிதர்களின் நோய் எதிர்ப்புசக்தி மிகவும் வலுவானது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கரோனா வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் திறன் கொண்டது. இந்த கோணத்தில் போதிய ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை என்பதே உண்மை.

கணக்கீடு தவறுகள்

கணினி மாதிரிகளை அடிப்படையாக வைத்து கரோனா வைரஸ் பரவலை கணித்து வருகின்றனர். குளிர்கால வைரஸ் காய்ச்சலில் ஒரு வகைதான் கரோனா வைரஸ் என்பதை விஞ்ஞானிகள் இதுவரை நம்ப மறுக்கின்றனர், இன்னும் சிலர், கரோனா வைரஸின் 2-வது அலை தாக்கும் என்று கூறி வருகின்றனர். வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடுவதிலேயே விஞ்ஞானிகள் ஆர்வமாக இருப்பது வியப்பளிக்கிறது.

சீனா முதல் உலக நாடுகள் வரையிலான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கரோனா வைரஸ் பெரும்பாலும் தொற்றவில்லை என்பது தெரியும். குழந்தைகள், சிறாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

எவ்வித அறிகுறியும் இல்லாமல் கரோனா வைரஸ் நோயாளிகள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி விழித்துக் கொள்ளும். வைரஸை எதிர்த்துப் போரிடும். அப்போது உடலில் வலி ஏற்படும். எனவே கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

மனித உடலில் வைரஸ் நுழையும் போது, நோய் எதிர்ப்பு சக்தி வைரஸைஎதிர்த்துப் போரிடும். அதாவது, வைரஸ்கள் உடல் அணுக்களோடு ஒட்டுவதை நோய் எதிர்ப்பு சக்தி தடுக்கும். இரண்டாம் கட்டமாக ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் (டி செல்ஸ்) உடலின் அனைத்து பாகங்களிலும் சல்லடை போட்டு தேடி, கடைசி வைரஸ் அழியும் வரை போரிடும்.

இதற்கிடையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவரை, பிசிஆர் சோதனைக்கு நாம் உட்படுத்துகிறோம். அப்போது அவருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. உண்மையில் அவர் நோயாளி கிடையாது. அவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியால் அழிக்கப்பட்ட கரோனா வைரஸின் சிதைவுகள் உடலில் தேங்கியிருக்கும். அந்த வைரஸ் சிதைவு காரணமாகவே, அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக பரிசோதனை முடிவு வருகிறது. இதுதான் இப்போது உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதற்கும் இதுவே முக்கிய காரணம்.

கவாசகி காய்ச்சல்

வயதாகும் போது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி குறையும். போதியஊட்டச்சத்து உணவு கிடைக்காதவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை கரோனா வைரஸ் தொற்றும் போது உடல் முழுவதும் வைரஸ் பரவும். அவர்களின் முதல்கட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் வைரஸை எதிர்த்துப் போரிட முடியாது. 2-ம் கட்டமாக வெள்ளை அணுக்கள் வைரஸை அழிக்க போராடும். அப்போது நோயாளியின் உடலில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தைகள், சிறாருக்கு இந்த பிரச்சினை ஏற்படாது. சில நேரங்களில்நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை வைரஸ் தாக்கும் போது, அவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. அந்த பாதிப்பை, கரோனா வைரஸோடு தொடர்புடைய கவாசகி காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு இவ்வகை காய்ச்சல் ஏற்படுவது மிகவும் அரிது.

அடுத்து என்ன?

ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த வைரஸ் குளிர்காலத்தில் மீண்டும் பரவக் கூடும். நிச்சயமாக அது 2-வது அலை கிடையாது. சாதாரண சளி காய்ச்சலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்கள், கரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் முகக்கவசம் அணிந்து நடமாடுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் முகக் கவசத்துக்குப் பதிலாக தலையில் ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம். கரோனா வைரஸ் தொற்றைவிட, தலையில் ஏதாவது விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

என்னைப் பொறுத்த வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 65 வயதுக்குமேற்பட்ட முதியவர்களை கரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம்உள்ளது. அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற முன்னுரிமை அளித்தால் போதுமானது. இவ்வாறு பேடா எம் ஸ்டாட்லர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்