சவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சவுதியில் கரோனா தொற்று எண்ணிக்கை 2,29,480 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகினர். இதுவரை சவுதியில் கரோனாவுக்குப் பலியானவர்கள் எண்ணிகை 2,181 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சவுதியில் 2,29,480 பேர் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதி அரேபியாவும் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.

கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்