கஜகஸ்தானில் பரவும் நிமோனியா கரோனாவாக இருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

கஜகஸ்தானில் பரவும் நிமோனியா கரோனா வைரஸாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பெரும் பாதிப்பை உலக நாடுகளிடம் ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கஜகஸ்தானில் நிமோனியா நோய் தீவிரமாகப் பரவி வருவதாகச் செய்திகள் வெளியாயின.

மேலும், நுரையீரலைத் தாக்கும் இந்த நிமோனியா நோயால் கடந்த சில மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று கஜகாஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பை கஜகஸ்தான் அரசு மறுத்தது.

இந்த நிலையில் நிமோனியா பரவல் கரோனா வைரஸாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரப் பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் கூறும்போது, “இதில் பல சோதனை முடிவுகள் தவறுதலாக நிமோனியா என வந்திருக்கலாம். உண்மையில் அவை கரோனா வைரஸுடன் தொடர்புடையவை” என்று தெரிவித்துள்ளார்.

கஜகஸ்தானில் 56,455 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,500 பேர் குணமடைந்த நிலையில் 264 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்