தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 50% முதல் 60% பேர் எந்தவித அறிகுறியும் அற்றவர்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் 2,50,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 50% முதல் 60% பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 80% சிறுவர், சிறுமியருக்குக் கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை” என்று தெரிவிக்கபட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கரோனா தொற்று பாதிப்பில் மூன்றில் 2 பங்கு வெஸ்டர்ன் கேப் மாகாணத்தின் கேப்டவுன் நகரில் உள்ளவையாகும். இங்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள நிலைமையை ஒத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஏற்கெனவே எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடுகளில் தென் கொரியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.
கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.
இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago