ரஷ்யாவில் கரோனா தொற்று 6,94,230 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,368 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து கரோனா நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,368 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,230 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள 82 மாகாணங்களில் கரோனா தொற்று காணப்படுகிறது. நேற்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 1,902 பேருக்குக் கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. மாஸ்கோவில் தொடர்ச்சியாக கரோனா தொற்று அதிகமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,551 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். ரஷ்யாவில் சுமார் 4,63,880 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 10,494 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்