சீனாவின் சமூகவலைதள செயலிகளுக்கு தடை: அமெரிக்காவும் பரிசீலனை

By செய்திப்பிரிவு

சீனாவின் 59 சமூகவலைதள செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க அமெரிக்க பரிசீலித்து வருகிறது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்தது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களுக்கு விற்பகப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்ததையடுத்து, இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த 59 செயலிகளில் புகழ்பெற்ற வீசாட், பிகோ லைவ், ஹெலோ, லைக்கி, கேம்ஸ்கேனர், டிக்டாக், ஷேர்இட், யுசிபிரவுசர்,விகோ வீடியோ, எம்ஐ வீடியோ கால், கிளாஸ் ஆப் கிங்ஸ், கிளப் பேக்டரி உள்ளிட்ட பல்வேறு செயலிகள் அடங்கும்.

ஆனால் டிக் டாக் செயலி தரப்பில் ‘‘நாங்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். எங்களை அழைத்து விளக்கம் கேட்டால், அரசு தரப்பிடம் அனைத்துவிதமான விளக்கத்தையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.

இந்தியர்கள் உள்ளிட்ட யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் சீனா உள்பட எந்த வெளிநாட்டிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை தெரிவிப்போம். தனிப்பட்ட மனிதர்களின் அனைத்து விவரங்களையும் இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டு தொடர்ந்து பாதுகாப்போம்.’’ என தெரிவிக்கப்பட்டது.

மைக் பாம்பியோ

இந்தநிலையில் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க அமெரிக்க பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதாவது:
‘‘சமூகவலைதளங்களில் டிக்டாக் உட்பட பிரபலமாக உள்ள சில சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து நாங்களும் பரிசீலித்து வருகிறோம். நிச்சயமாக தீவிர நடவடிக்கை எடுப்போம்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்