கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை மெக்சிகோவில் 30,000 என்ற எண்ணிக்கையைக் கடந்ததையடுத்து பலி எண்ணிக்கையில் பிரான்சைக் கடந்து 5ம் இடத்தில் உள்ளது.
சனிக்கிழமையன்று மட்டும் 523 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 30,366 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் ஒரேநாள் பாதிப்பு 6000த்திற்கும் அதிகமாகி மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 251,165 ஆக உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினுக்குச் சமமாக 8-ம் இடத்தில் உள்ளது.
அங்கு லாக்டவுன் உள்ளதால் தெருவில் வந்து விற்பனை செய்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட 200 விற்பனையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதாவது தாங்கள் மீண்டும் விற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மார்ச் மாதம் முதலே கடைத்தெரு கடைகள், வியாபாரங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் குதித்த 200 கடைத்தெரு வியாபாரிகள் தங்களால் இனி லாக்டவுனைத் தாங்க முடியாது என்றும் வேலையின்மைக்கான காப்பீடு உள்ளிட்ட வசதிகள் தங்களுக்கு இல்லை என்றும் கோஷமிட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago