’ஹாங்காங்கை விடுவிப்பது, நமது காலத்தின் புரட்சி’ என்ற ஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு அந்நகர அரசு தடைவித்தித்துள்ளது.
ஹாங்காங் போராட்டக்காரர்களில் கொடிகளில் இந்த வாக்கியம் எப்போதும் இடம்பெற்றிருக்கும் இந்த நிலையில் இதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேச பாதுகாப்புத் தொடர்பாக சீன அரசு இயற்றியுள்ள சமீபத்திய சட்டப்படி இந்த முழக்கம் பிரிவனைவாத்தைக் குறிக்கக் கூடியாதாக இருக்கிறது. சீனாவின் சிறப்பு ஆளுகைக்குள் இருக்கும் ஹாங்காங்கை விடுவிக்க வேண்டும் என்று கோருவதாக இருக்கிறது. எனவே அந்த முழக்கத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக ஹாங்காங் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு சட்டத்தின்படி பிரிவினைவாதம், பயங்கரவாதம், வன்முறையில் ஈடுபடுதல், வெளிநாட்டு அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து நாட்டு எதிராக செயல்படுதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து சீனாவின் கட்டுப்பாட்டுக்கு ஹாங்காங் வந்ததன் 23-வது ஆண்டுவிழா கடந்த புதன்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. அப்போது சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 370 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் புதிய சட்டவிதியின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ‘
புதிய சட்டம் தேச பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இயற்றபட்டுள்ளது. கருத்துரிமையை பாதிக்காது என்று சீனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1997-ல் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ‘ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற ரீதியில் இயங்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருக்கும். அதேசமயம் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை தவிர்த்து ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் என்று முடிவுவெடுக்கப்பட்டது. ஆனால் சமீபமாக சீனாவின் ஹாங்காங்கின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago