கரோனா வைரஸ்; வாக்சின் கண்டுபிடித்த சீனா: முதலில் ராணுவத்தில் ஓராண்டுக்குப் பயன்படுத்த அனுமதி

By ஏஎஃப்பி

சீன ராணுவ ஆராய்ச்சி பிரிவும் பயோடெக் நிறுவனம் ஒன்றும் தயாரித்துள்ள கரோனா வைரஸ் வாக்சினை ராணுவத்தினர் மத்தியில் பயன்படுத்த சீனா அனுமதித்துள்ளது.

வூஹானில் கடந்த டிசம்பரில் தொடங்கி உலகம் நெடுகப் பரவிய கோவிட்-19 எனும் கரோனா வைரஸுக்கு இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாக பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியையும் கடந்துவிட்டது. பல நாடுகளும் இதற்கு எப்படியாவது தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியை முடுக்கி விட்டுள்ளன

உலக சுகாதார அமைப்பு 17 வாக்சின்களை இதுவரை அடையாளப்படுத்தியுள்ளது. இவை மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவின் ராணுவ தயாரிப்பான வாக்சின் ‘நல்ல பாதுகாப்பு அம்சங்கள்’ உடன் இருப்பதாக ஹாங்காங் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த வாக்சின் கரோனாவைக் குணப்படுத்தவல்லது என்று தெரிவித்துள்ளது

ஜூன் 25-ம் தேதி இதனை ராணுவத்தில் பயன்படுத்த சீனா அனுமதியளித்துள்ளது, அதாவது ஓராண்டுக்கு இதனைப் பயன்படுத்த சீன மத்திய ராணுவ ஆணையம் அனுமதியளித்துள்ளது.

பெய்ஜிங் பயோடெக்னாலஜி கழகமும் கேன்சினோ நிறுவனமும் சேர்ந்து தயாரித்த வாக்சினாகும். இது ராணுவ மருத்துவ விஞ்ஞான அகாடமியின் ஒரு அங்கமாகும்.

இதன் பயன்பாடு மேலும் அனுமதிகளின்றி பரவலாக்கம் செய்ய முடியாது. சீனாவின் மிகப்பெரிய, விரிவான ராணுவப்படையினருக்கு இதை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் சீன ராணுவ அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லை.

இந்த வாக்சின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கிளினிக்கல் சோதனையில் சீனாவில் உள்ளது, ஆகவே இதனை உத்தரவாதமாகத் தெரிவிக்க முடியாது என்று கேன்சினோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

131 வாக்சின்கள் கிளினிக்கல் சோதனைக்கு முந்திய கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

எந்த வாக்சினும் இதுவரை கரோனாவுக்கு எதிராக வணிகப் பயன்பாடுகளுக்காக அனுமதிக்கப்படவில்லை.

லான்செட் மருத்துவ இதழின் படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்சின்கள் கிளினிக்கல் சோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், திறம்பட்ட, மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கான உத்தரவாதங்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்