சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் பணியில் பெய்ஜிங் அரசு இறங்கியுள்ளது.
இம்மாத துவக்கத்தில் பெய்ஜிங்கில் 200 மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நகர மக்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், தற்போது 100 பல்கலைகழகங்களில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை பெய்ஜிங்க் அரசு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது. தற்போது பல்கலைகழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள பெய்ஜிங்கில் கடந்த இருவாரங்களில் மட்டும் 70 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களாக அங்கு வைரஸ் தொற்று முற்றிலும் குறைந்து இருந்தது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 தினங்களில் 311 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பெய்ஜிங்கில் உள்ள ஷின்ஃபாடி உணவுச் சந்தையிலிருந்து கரோனா தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது,
கடந்த இருமாதங்களாக பெய்ஜிங்கில் புதிதாக தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசோதனையை மிக அதிக அளவில் துரிதமாக அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ஷின்பாடி மார்கெட் பகுதியை சுற்றி இருப்பவர்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக பிறபகுதியினரும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago