தூய எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்யுங்கள், கரோனாவிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்துங்கள் என்று பெயரைக் குறிப்பிடாமல் இந்தியாவுக்கு ஐநா தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
வணிக ரீதியான உற்பத்திக்காக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை இந்தியா ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட்டதையடுத்து ஐ.நா. தலைவர் ஆண்டனியோ கட்டரெஸ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் கோவிட்-19லிருந்து மீளும் திட்டத்தில் எந்த ஒருநாடும் நிலக்கரியைச் சேர்க்க வேண்டியதில்லை, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்யுங்கள் என்று சூசகமாக அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட்-19 அல்லது கரோன வைரஸ் குறித்த ஐநா எதிர்வினை பற்றிய வழங்கலில் கட்டரெஸ் ஐநா, உலகச் சுகாதார அமைப்பு கடந்த 3 மாதங்களக மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் தொகுத்தளித்தது.
“எவையெல்லாம் இந்த நெருக்கடிக்குக் காரணமோ மீண்டும் அதே நடவடிக்கைகளுக்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது. நாம் மீண்டும் கட்டமைக்கும் போது உயிர்களைக் காக்கும், அனைவருக்குமான பாலின சமத்துவம் உள்ள சமூகங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்.
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் வானிலை மாற்ற விளைவுகளினால் ஏழை நாடுகள் பாதிக்கும் வகையிலான கோவிட்-19 மீட்புக் காலத்தில் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் குறித்த தேவை நமக்கு ஏற்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இந்தக் காலக்கட்டம் சுற்றுச்சூழலை கெடுக்காத, பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றாத தூய எரிசக்தி முறைக்கு நாம் செல்ல வேண்டிய காலக்கட்டம். அதாவது ஒரு நாகரீகமான வேலையையும் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்கும் வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டுமே தவிர மீண்டும் இந்த தீங்கிற்கெல்லாம் காரணமாகும் ஒன்றுக்கு மீண்டும் செல்லக் கூடாது.” என்றார்.
கட்டரெஸ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் கூறியது இந்தியாவை நோக்கியே என்று தெரிகிறது, ஏனெனில் இந்தியாதான் வர்த்தக நிலக்கரி நடவடிக்கைகளுக்காக சுரங்கங்கள் ஏலத்துக்கு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியாவின் நிலக்கரி துறையை தனியாருக்கு அளிப்பதை, இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறும் திசையை நோக்கிய முன்னெடுப்பு என்று இதனை ஆளும் கட்சியினர் வர்ணிக்கின்றனர்.
அடுத்த 5-7 ஆண்டுகளில் நாட்டில் இது சுமார் ரூ.33,000 கோடி முதலீட்டை வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கரோனா காலக்கட்டத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியா இதிலிருந்து மீண்டு சுயசார்பு அடையும் என்று பிரதமர் மோடி பேசினார். தனியார்மயம் மூலம் நிலக்கரி ஏற்றுமதியில் இந்தியா 4வது பெரிய நாடாகும் என்று பேசினார் பிரதமர் மோடி.
இதனையடுத்தே ஐ.நா.தலைவர் கட்டரெஸ், நிலக்கரி மீது நாடுகளுக்கு ஒரு பீடிப்பு நோய் உள்ளது. வானிலை மாற்றத்தில் நிலக்கரி உற்பத்திதான் பெரிய பங்களிப்பு செய்கிறது என்பது நாடுகளுக்குத் தெரியாதா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago