பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், அவ்வாறு உத்தரவை அவர் மதிக்காவிட்டால், நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜேர் போல்சோனாரோ. கரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது, மக்கள் சமூக விலகல், முக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மக்களின் சுகாதார நலனில் காட்டும் அக்கறையைவிட, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாரோ அதேபோன்ற மனப்பாங்கு உடையவர் போல்சனாரோ.
மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்ைகயில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அதிபர் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை.
உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள், உயிரிழப்பில் அதிகமாக இருக்கும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தார்போல் பிரேசில்தான் இருக்கிறது. பிரேசிலில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர், 11 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
» எந்த நாட்டுடனும் வர்த்தகத்தை துண்டிப்பது இந்தியாவுக்கு உதவாது: தலைமைப் பொருளாதார ஆலோசகர் கருத்து
இருப்பினும் அதிபர் ட்ரம்ப் கூறியதுபோல் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படாத மலேரியா மாத்திரைகள் மூலம் கரோனாவை ஒழித்துவிடலாம் என்று அதிபர் போல்சோனாரா நம்பி பிரச்சாரம் செய்து வருகிறார்
மக்களிடையே சென்றுபேசும்போதும், கூட்டங்களில் பங்கேற்கும்போது அதிபர் போல்சோனாரோ முக்கவசம் அணியாமல் இருப்பதால், அவரைக் மாவட்ட நீதிபதி கடுமையாக் கண்டித்துள்ளார்.
தலைநகர் பிரேசிலியாவை விட்டு அதிபர் போல்சோனாரோ எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
ஒரு நாட்டின் அதிபருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிடுவது இதுதான் முதல்முறையாகும்.
மாவட்ட நீதிபதி ரெனாட்டோ கோல்ஹோ பிறப்பித்த உத்தரவில், “ அதிபர் போல்சோனாரோ வெளியிடங்களுக்குச் சென்று மக்களுடன் பேசும்போது கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் அவ்வாறு நடந்தால் தேசிய அளவில் குழப்பத்தை விளைவிக்கும்.
அதிபர் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தடுக்க முடியாது. ஆதலால், தலைநகரை விட்டு வெளியே செல்லும் போது அதிபர் போல்சோனாரோ கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் இல்லாவிட்டால் நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்
பிரேசில் அதிபர் போல்சனாரோ மட்டுமல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ அதிபர் அன்ட்ரஸ் மேனுல் லோபஸ் ஓப்ரடார், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட் பெர்னான்டஸ் ஆகியோர் வெளியே செல்லும் போது முக்கவசம் அணியால் ஆதரவாளர்களிடம் பேசுவதும், செல்பி எடுப்பதுமாக இருக்கிறார்கள்
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago