அமெரிக்காவின் 23 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ அமெரிக்காவில் கடந்த ஒருவாரமாக அரிசோனா, டெக்சாஸ் உள்ளிட்ட 23 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த வாரத்தில் மட்டும் 5,000 இறப்புகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ், தெற்கு கலிபோர்னியாவிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அம்மாகாண ஆளுநர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
» வாரிசு அரசியல் சர்ச்சை எதிரொலி: கான் நடிகர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரச்சாரம்
» கரோனா ஊரடங்கிலும் தடையின்றி நடக்கும் விவசாயம்; ஆள் கிடைக்காமல் அவதியுறும் விவசாயிகள்
தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால்,பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago