இலங்கை உள்நாட்டுப் போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன் சில் தலைவர் ஜெத் ராட் உல் உசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. அப்போது கவுன் சிலின் தலைவர் ஜெத் ராட் உல் உசேன் பேசியதாவது: இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர் பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளன. பொதுமக்கள் ஏராள மானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க வேண் டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.
இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அக்கறை வரவேற்கத் தக்கது. அதேநேரம் அந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை புதன் கிழமை வெளியிடப்படும். அப்போது சில கடுமையான முடிவுகளும் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமை அளிக்கப் பட்டதாகதாகவும் இதுகுறித்து 6 நாட்களுக்குள் பதில் அளிக்கு மாறு ஐ.நா. சபை கேட்டுக் கொண் டிருப்பதாகவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை தரப்பில் அந்த நாட்டு வெளி யுறவு அமைச்சர் மங்கள சமர வீரா பங்கேற்றுள்ளார். அவர் கூறியதாவது: தென்ஆப்பிரிக் காவைப் பின்பற்றி உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசின் ஆலோ சனையைக் கோரியுள்ளோம். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனம் வரையறுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் ஜெத் ராட் உல் உசேனை அமைச்சர் மங்கள சமரவீரா தனியாகச் சந்தித் துப் பேசினார்.
அப்போது, இலங்கை அரசு சார்பில் சுதந்தி ரமான விசாரணை அமைப்பு அமைக்கப்படும் என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago