இணைய தேடுதல் பிரிவில் செல்வாக்கை தவறாக பயன்படுத்துகிறது கூகுள் தேடுபொறி நிறுவனம்: இந்திய போட்டி கண்காணிப்பு ஆணையம் குற்றச்சாட்டு

By ராய்ட்டர்ஸ்

இணைய தேடுபொறியான கூகுள் அத்துறையில் தனது ஆதிக்கத்தையும், செல்வாக் கையும் தவறாக பயன்படுத்துகிறது என்று இந்திய நிறுவன போட்டி கண்காணிப்பு ஆணையம் (சிசிஐ) குற்றம்சாட்டியுள்ளது.

இணையதளத்தில் பல்வேறு தேடுபொறிகள் இருந்தாலும் அமெரிக்காவின் கூகுள் அதில் முன்னிலை வகிக்கிறது. இத்துறையில் கூகுள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இணையதள விளம்பர சேவை, தகவல்களை தேடித் தருவது போன்றவற்றில் ஒருசார்பான மற்றும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அந்நிறுவனம் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனம் பெரிய அளவு தொகையை அபராதமாக செலுத்த வேண்டியது வரும் என்று இந்திய நிறுவன போட்டி கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

போட்டி நிறுவனங்களை நசுக்கும் விதமாக ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் பல பில்லியன் யூரோவை ஏற்கெனவே அபராதமாக விதித்துள்ளது. எனினும் கூகுள் நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இந்நிலையில் இந்திய நிறுவன போட்டி கட்டுப்பாட்டு ஆணையத்திடமும் கூகுள் இப்போது சிக்கியுள்ளது. 2012-ம் ஆண்டு முதல்முறையாக கூகுளின் செயல்பாடுகள் குறித்து நிறுவன போட்டி கண்காணிப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியது. அதன் முதல்நிலை அறிக்கை 6 மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

அது இப்போது இந்திய ஊடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. அப்போது கூகுள் சார்பில் அதன் அதிகாரிகள், 7 பேர் அடங்கிய இந்திய நிறுவன போட்டி கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் குழுவின் முன்பு ஆஜராவார்கள் என்று தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனது ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்தை கூகுள் நிறுவனம் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும்.

எனினும் இந்திய நிறுவன போட்டி சட்டங்களுக்கு உட்பட்டுதான் அந்நாட்டில் கூகுள் செயல்பட்டு வருகிறது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாரத் மேட்ரிமோனி மற்றும் சமூக சேவை நிறுவனமான நுகர்வோர் ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வு அமைப்பு ஆகியவை கூகுள் மீது இந்திய நிறுவன போட்டி ஆணையத்தில் புகார் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்