முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டதால் கரோனா வைரஸ் பரவுவது கணிசமாக தடுக்கப்பட் டிருக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் ஆகிய 3 முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர்கள், நிபுணர்கள் உலகம் முழுவதும் பரிந்துரைத்தனர்.
இந்நிலையில், அமெ ரிக்காவின் தேசிய அறி வியல் அகடமி ஆராய்ச்சி யாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில், கரோ னாவைத் தடுக்க முகக் கவசம் அணி வது நல்ல பலனை தருவ தாக தெரிய வந்துள்ளது. வைரஸால் கடுமையாக பாதிக் கப்பட்ட வடக்கு இத்தாலியில், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துள்ளன. நியூயார்க்கில் மட்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமான பின், தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
சுவாசிக்கும்போது காற்றின் நீர்த்துளிகள் வழியாக கரோனா வைரஸ் உள்ளே செல்வதை முகக்கவசம் தடுக்கிறது. இதனால் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இவ்வாறு அமெரிக்க தேசிய அறிவியல் அகடமி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago