உலகைப் புரட்டி எடுத்து வரும் கரோனா வைரஸ் தாக்கம் தென் ஆப்பிரிக்காவில் தீவிரமாகப் பரவி வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் 3,359 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 1,354 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் கரோனா தொற்றுகளில் மூன்றில் 2 பங்கு வெஸ்டர்ன் கேப் மாகாணத்தின் கேப்டவுன் நகரில் உள்ளவையாகும். இங்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ல நிலைமையை ஒத்திருக்கிறது என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் ஏற்கெனவே எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒட்டுமொத்தமாக 54 நாடுகளில் 2 லட்சத்து 18,000 கரோனா பாதிப்புகள் உள்ளன பெருந்தொற்று சமூகப்பரவல் கட்டத்தில் ஆப்பிரிக்காவில் இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது, உலக கரோனா பாதிப்பில் 3% தான் என்றாலும் அங்கெல்லாம் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் பரவல் வேகம் பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதே உண்மை. பெரும்பாலும் ஏழைநாடுகளாகும்.
தென் ஆப்பிரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமாக கரோனா பரிசோதனை மேர்கொள்ளப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகள் பரிசோதனை எண்ணிக்கையில் இது தோராயமாக மூன்றில் ஒரு பங்காகும்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago