இத்தாலியில் கரோனா பலி 34,114 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இத்தாலியில் கரோனா பலி எண்ணிக்கை 34,114 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனா பலி எண்ணிக்கை 34,114 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை 2,35,763 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,293 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை இத்தாலியில் 1,69,939 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சர்வதேசப் பயணத்தை ஜூன் 3-ம் தேதி முதல் இத்தாலி அனுமதித்தது.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

மேலும்