ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 684 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோலோ செய்தி நிறுவனம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 684 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,142 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு நேற்று 21 பேர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது. 3,013 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகர் அகமத் ஜாவத் ஒஸ்மானி கூறும்போது, “மருத்துவமனைகளில் இன்னும் பல குறைபாடுகள் உள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளில் நாங்கள் தொடந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
» சென்னையில் கரோனா: உதவிக்கு அழைக்க மண்டல ரீதியாக உதவி எண்கள்; மாநகராட்சி அறிவிப்பு
» புட்டிப் பால் அருந்திய புள்ளிமான் குட்டி: நெகிழவைக்கும் பழங்குடியினர் வாழ்க்கை
ஆப்கானிஸ்தானில் கரோனா எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிற நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிதாகத் தொற்றுக்கு உள்ளாகும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலையை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் கரோனா தொற்றை எதிர்கொள்வதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. எதிர்பார்த்ததை விட தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கரோனா தொற்று மிக அதிகம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago