தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது: அதிபர் கவலை

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் வேகமாக வளர்ந்து வருகிறது என்று அதிபர் சிரில் கவலை தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 48,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 1,84,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேர் வரை பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது , “மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது நிச்சயம் கவலை அளிக்கிறது. சுகாதார வசதிகளைப் பெருக்குவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கின் மூலம் நாம் வைரஸ் பரவும் காலத்தைத் தாழ்த்த முடியும். ஆனால், வைரஸ் பரவுவதை நிறுத்த முடியாது. தடுப்பூசி கிடைக்கும்வரை கரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த முடியாது. கரோனா வைரஸ் நமது மக்களிடையே பரவத்தான் போகிறது. இதன் அர்த்தம் நாம் கரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் என்பதை உணர்த்துகிறது என்று சிரில் ரமபோசா முன்னரே தெரிவித்திருந்தார்.

முன்னதாக 10 வாரங்கள் தொடர்ந்த ஊரடங்கை பொருளாதார சூழலைக் காரணம் காட்டி தென் ஆப்பிரிக்க அரசு தளர்த்தியது. மேலும், பணியாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்குச் செல்லவும் தென் ஆப்பிரிக்க அரசு வலியுறுத்தியது.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை கரோனா தொற்றால் 50,879 பேர் பாதிக்கப்படுள்ளனர். 1,080 பேர் பலியாகியுள்ளனர். 26,099 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்