உலகளவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சுயதிருப்தி அடைந்துவிடாதீர்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கெப்ரியாசஸ் எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கெப்ரியாசஸ் ஜெனிவாவி்ல் நேற்று ஊடகங்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மிக மோசமாகி வருகிறது. அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு குறையாதபோது மக்கள் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வது நிலைமையை மேலும் விபரீதமாக்கும்.
இனரீதியிலான வேறுபாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடுமையாக எதிர்்ப்புத் தெரிவிக்கிறது. அதேசமயம், சமூக விலகலுடன் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணிந்து போராட்டங்களில் ஈடுபடுங்கள். உடல்நல பாதிப்பு ேலசாக இருந்தாலும் போராட்டங்கள், கூட்டங்களில் பங்கேற்காமல் தனித்திருங்கள்.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கரோனாவுக்கு உலகளவில் 4 லட்சத்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளார்கள், 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அமெரிக்காவில் மட்டும் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருலட்சத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளார்கள்.
கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மெல்ல விடுபட்டு வருகின்றன. கிழக்கு ஆசியா, ஐரோப்பா தான் கரோனாவின் தாக்குதலுக்கு மோசமாக ஆளாகி இருந்தது என்ற நிலை மாறி இப்போது அமெரிக்கா வந்துவிட்டது. ஐரோப்பியாவில் சூழல் மெல்ல முன்னேறிவரும் போது, உலகளவில் மோசமாகி வருகிறது
கடந்த 10 நாட்களில் 9 நாட்களில் உலகளவில் நாள்தோறும் ஒருலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தெற்காசியா, அமெரி்க்காவில் இருந்து மட்டும் 75 சதவீதம் கரோனா நோயாளிகள் புதிதாக உருவாகியுள்ளார்கள்
கரோனாவிலிருந்து விடுவட்டு வரும் நாடுகளுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது சுயதிருப்தி அடைதல்தான். நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்ற சுயதிருப்தி என்பது ஆபத்தானது. உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கரோனா பாதிப்புடனே அலைகிறார்கள்
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த வைரஸைக் கவனித்து வருகிறோம். எந்த நாடும் கவனக்குறைவாக இருப்பதற்கு இது சரியான நேரம் அல்ல.
ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் மட்டும்தான் ஆயிரத்துக்கும் உள்ளாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் சில நாடுகளில் கரோனாவிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு வருவதையும் வரவேற்கிறோம்
இவ்வாறு டெட்ராஸ் அதானன் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
49 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago