சவுதி அரேபியாவில் கரோனா தொற்று ஒரு லட்சத்தை கடந்தது

By செய்திப்பிரிவு

சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,045 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சவுதியில் கடந்த மே மாதம் முதல் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சவுதியில் சுமார் 3,045 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை 1,01, 914 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சவுதியில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 72,817 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் இம்மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சவுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்கு தளர்வுகளும் அளி்க்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறை தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

42 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்